L என்னும் துப்பறிவாளன்



மரணப் புத்தகம்
பூமிக்கு வந்ததே
அறமற்றவன் அறமென்னும்
போர்வையில்ஆட்கொள்ளவே
படுகொலைகள் நிகழ்ந்தன
அதனையே துப்பறிய
வந்தவன் இந்நாயகன்
உலகத்தின் பலவழக்குகள்
தீர்த்தவன் அவன்முகம்
என்றுமே மறைத்தவன்
இவ்வழக்கில் மட்டுமே
முகத்தினை காட்டியவன்
இவனே எல்லென்று
அறிந்தவர் மிகச்சிலரே
என்மனம் கொள்ளை
கொண்ட பாத்திரங்களுல்
முதன்மை அவனே
மெய்யறிவுக்கும் பகுத்தறிவிற்கும்
வேறுபாடு காட்டும்
இத்தொடரே இந்நாயகன்
கொண்டதே பகுத்தறிவு.
அவனின் சிந்திக்கும்
முறையோ மிகத்தெளிவு
புத்திக் கூர்மையின்
உச்சத்தில் அவன்
சக்திக் கூர்மையிலும்
உச்சத்தில் தீயவன்
சக்தி இருந்தும்
கத்தி மேல்
வாழ்ந்திடுவான் தீயவன்
செய்ததே எல்லவன்(L)
அறிவிலும் அறத்திலும்
சமநிலைக் கொண்டவன்
பொழுது எல்லாம்
பனிக்கூழ் தின்பான்
ஆயினும் மிகவும்
மெலிந்து இருப்பான்
எல்லவன்(L) மரணித்த
கணமுதல் தோய்ந்து
போகுமே அத்தொடர்
இறுதிவரை அவன்பெயரை
யாருமே அறியார்
தொடரின் பார்வையாளர்.

Comments