சைவக் காமம்
அதென்ன சைவக் காமம் ?
சைவம் அசைவம் எல்லாம்
காதலில் தானே உண்டெனக்
கூறும் வைரமான முத்துவரிகள்,
காமமே அசைவம் என்றே
வாதிட்டதே வெள்ளித்திரை பாடல்
தேகத்தின் பால்வரும் மயக்கமே
காமம் உயிரின் உணர்வறியா
வலியறியா தன்தேகம் வளர்க்க
உயிர்கொன்று தன்நாவில் ருசிக்க
செய்வதே அசைவம் உயிர்வலி
உணர்ந்து தன்தேகம் வளர்க்க
மாற்றுவழி காண்பதே சைவம்.
அவள்சூடிய பூக்களை சேகரிக்கிறேன்
பூக்களின் வாசத்திற்கு அன்றவள்
வாசனைக்கு கூந்தலின் பிடிப்புச்சட்டம்
எடுத்து வைத்து இருப்பது
என்மனதை பிடித்து வைப்பதற்கு
அவளுதட்டுச் சாயம் படிந்த
நெகிழி குவளையை திருடினேன்
என்னுதடோடு உரசும் மெய்நிகர்
உணர்விற்கு அவளின் உதிர்ந்த
தலைமுடியை எடுத்து வைத்தேன்
கூந்தலில் இயற்கையாய் வாசம்
உண்டென எண்ணி இதனைத்
வெள்ளித் திரையில் காதலென்று
பலவருடம் காட்டினார்கள் நானிதையே
சைவக் காமம் என்கிறேன்.
தொலைவில் இருந்து உடலளவில்
உணர்வளவில் வலியினை ஏற்படுத்தாது
தேகத்தின் பால்தோன்றிய மயக்கத்தின்
விழைவால் செய்கின்ற செயல்களே.


Comments
Post a Comment