அம்மா


உயிர்கள் யாவும் எதிர்பாரற்ற
அன்புக்கு ஏங்கும் ?

அத்தகைய அன்பொரு கானல்
நீர்ப்போன்று இருப்பது

அதைத்தரு வதுமிக கடினம்
சமூக மாந்தர்க்கு

ஞானிகளே தருவர் ஆயினும்
வேண்டும் சமூகத்தில்

பொறிக்கடலை வாங்குதல் போல
வேண்டுமாம் அவ்வன்பு

என்ன செய்யும் இயற்கை ?
படைத்தது அம்மாவை

சன்யாசி யாயினும் விவேகன்
கலங்கினான் அம்மாவுக்கு

என்ன சொல்ல எத்தனைக்
காப்பியம் எழுத

அம்மாவைப் பற்றி பின்வரும்
வரிகளுக் கப்பால்

என்னால் இயலாது, குழந்தையின்
நோக்கில் சொன்னால்

யாரென்று யானறியா காலத்திலும்
என்னை அறிந்தாயடி

நீயாரடி யனக்குப்பசி தெறியுமுன்
நீயறிவது எவ்வாறு.

என்வயிற்றில் பசிக்கும் வேளையிலுன்
மார்பகங்களில் உணவுற்பத்தி

ஏங்கிய உயிர்களுக்கு இயற்கையின்
விடையே அம்மா .

Comments