யாரிவள் கொற்றவை ?


யாரிவள் இலக்கியத்தின் கொற்றவை

பாலை நிலத்தின் கடவுளோ

எயினர் வேட்டுவரின் தெய்வமோ?
 

எயினர்கள் பாலைநிலக் கள்வர்களே
 

எனவாகக் கூறுமே சங்ககாலம்
 

பின்வந்த இலக்கிய வளங்கள்.
 

பழந்தமிழ் இலக்கியம் சிலவற்றுள்
 

குறிஞ்சி நிலத்தின் கடவுளெனவும்
 

திருமுரு காற்றுப்படை இலும்பெரும்
 

பாணாற்றுப் படையிலும் தமிழ்க்கடவுளின்
 

தாயெனவும் குறிப்புகளும் சிலவுண்டு



குறிஞ்சியின் இறையெனவே ஆகயிருந்து

பாலைக்கென வேமாறிய தெதனாலோ ?

தமிழ்ச்சார்ந்த நிலபரப்பில் பாலையின்றி

போகவே முல்லையும் குறிஞ்சியும்

வறட்சியால் வெம்மையால் வளங்குன்றி

போனதையே பாலையெனக் கொள்ளலாம்

எனக்கூறிய தமிழ்மரபே இவ்வண்ணமே

குறிஞ்சிக் கடவுளின் தாயெனவே

வந்தவள் இலக்கியத்தில் நிலமாறியேப்

போனதின் வரலாறு, இங்ஙனமே

நோக்கினால் சமகால தமிழகமே

இவளையே வணங்குதல் வேண்டுமே



தொல்காப்பியம் நூலிலே கொற்றவை

நிலையெனவே போற்றிய இடமுண்டு

போர்க்களம் செல்லுவோர் இவள்புகழைப்

பாடியே வழிபடும் மரபுண்டு

சிங்கக்கொடி பசுங்கிளி ஏந்தியிவளை

கலைமானை ஊர்தியெனக் கொண்டு

படையினிலே பேய்களைக் கொண்டவளை

கலித்தொகையில் வழிபடும் முறையுண்டு

இவள்பேர் தொற்றிய ஊரினிலே

கொற்றிகோடு எனவூர் ஒன்றுண்டு

தென்முனைக் குமரியினில் இருக்க

காணலாம் பல்லவர் காலத்து
 
கொற்றவை கோவில் மாமல்லப்

புரத்திலே திரௌபதி ஆனதெவ்

வகைமுன் ஏற்றமோ சமகாலத்திலே

Comments