இறைவனின் வரலாறு.
இறைவன் எங்கே செல்கிறான் ?
இறைவன் எங்கே வருகிறான்?
முரண் சிந்தை மன வயோதிகனோ ?
மேற்குலகத்தில் ஒருவனாகவும் ?
கிழக்குலகில் மற்றவனாகவும்
இருப்பவனோ ?
மேற்குலகில் அவன் அதிகாரம் படைத்தவன்,
சர்வ வல்லமை கொண்டவன்.
கிழக்குலகில் அவன் சித்தாந்தந்தகளின்
எழுச்சி சின்னம்.
அங்கே, அறிவியலின் வளர்ச்சியால்,
அவன் வானத்திலிருந்து, சூரிய மண்டலம்
தாண்டி, பிரஞ்ச எல்லைகளுக்கு அப்பால்
சென்று ஒளிகிறான்.
இங்கே சித்தாந்தங்களுக் குள்ளும் அறத்திலும்
அன்பிலும் உறைவிடம் கொண்டு பின் அதை
தாண்டி கடந்து உள்ளே செல்கிறான்
பிரக்ஞையாய்.
அங்கே அவனால் அதிகாரம் கொள்வர்.
இங்கே சரணாகதிக்கே அவனை கொள்வர்.
அங்கே அவனால் அகங்காரம் கொள்வர்.
இங்கே அகங்காரத்தை கொல்லவே
அவனை கொள்வர்.



Comments
Post a Comment