போதையிலிருந்து விடுதலை
போதையின் பிடியில் இருந்து
விடுபட வேண்டுமோ
ஞானிகளின் துறவிகளின் கூற்றுகளில்
புதைந்த விஷயங்கள்
உணவிற்கு அடிமை யெனில்
கவனித்தே ருசிக்க
போதைக்கு அடிமை யெனில்
போதையின் பொழுதில்
அதனின் செயல்பாட்டில் லயிக்காது
நன்றாகவே கவனிக்க
துறவிகளுக்குள் பலவுண்டு துறவறம்
காக்கவே இதுபோல
என்னவென்று புரிந்த பின்னர்
எதுவுமே உம்மை
ஆட்கொள்ளாது உன்னுடைய விருப்பம்
இன்றிவுன்னை தொடாது
ஆகவே நம்மரபில் மணத்திற்குபின்னே
துறவறம் வைத்தது
நித்யனந்தரை போலவே கிறுக்கத்தனம்
சிலர்செய்வர் என்றறிந்தே
அடிமைப் பட்டதாய் எண்ணினால்
வழியிதுவே விரும்பியே
செய்தால் சொல்வதற்கு யாதொன்றும்
இல்லையே என்னிடம்.



Comments
Post a Comment