நம்ம ஊர் குலசாமிங்க
நம்ம ஊர் குலசாமியெல்லாம்
காவல்காப்பவர் தான்
சில நேரம் மன்னவனும் உண்டு
மகராணியும் உண்டு
ஊர் தலைமைகளும் உண்டு
அந்தந்த ஊரில் யார்
முறையாய் காவல் காத்தனரோ?
அறம் போற்றி வாழ்ந்தனரோ ?
இரண்டு முன்று தலைமுறைகளில்
தெய்வம் ஆயினரே.
இன்னும் பலதலைமுறை கடந்தால்
இலக்கியத்தின் வழியில் தெய்வப்
பட்டியலில் சேர்ந்திடுமே.
வேத காலம் முதல் உபநிடக் காலம் வரை
கடவுள்களின் எண்ணிக்கை
மூப்பத்து மூன்று வெறும் எண்ணிலிருந்து
கோடியென ஆகியதே
இன்று எத்தனையோ?
ஆதிக் கடவுள் சிவன் வடக்கே வாழ்ந்த
ஆதிவாசி காவலனோ?
தமிழ் கடவுள் முருகன் தென்னத்து
மலைவாழ் மாந்தரின் மன்னவனோ?
வங்காளத்தில் ஊர் காத்து நின்றாளோ
துர்க்கை அவள்
மேற்கே மரபணுவால் சிதைந்த
முகங்கொண்ட கேள்வியின் நாயகன்
கடற்கரை மன்னவனோ?
இத்தகைய மாந்தர்களின்
பிம்பத்தின் மேலிலக்கியம்
வடித்தனரோ ?
அவர்தம் சிந்தைத்துளிகள்
கொண்டு அறிவுத்தேடல்கள்
தொடங்கினரோ ?
நிலந்தோறும் தோன்றிய
அறவோரெல்லாம் முன்னிருந்த
தெய்வத்தின் அவதாரமாகி
இலக்கியத்தில் நுழைந்தனரோ?
அறிவார் யாரோ ?
இந்த நீண்ட மரபினிலே ?
இலக்கியத்தின் வழியில் தெய்வப்
பட்டியலில் சேர்ந்திடுமே.
வேத காலம் முதல் உபநிடக் காலம் வரை
கடவுள்களின் எண்ணிக்கை
மூப்பத்து மூன்று வெறும் எண்ணிலிருந்து
கோடியென ஆகியதே
இன்று எத்தனையோ?
ஆதிக் கடவுள் சிவன் வடக்கே வாழ்ந்த
ஆதிவாசி காவலனோ?
தமிழ் கடவுள் முருகன் தென்னத்து
மலைவாழ் மாந்தரின் மன்னவனோ?
வங்காளத்தில் ஊர் காத்து நின்றாளோ
துர்க்கை அவள்
மேற்கே மரபணுவால் சிதைந்த
முகங்கொண்ட கேள்வியின் நாயகன்
கடற்கரை மன்னவனோ?
இத்தகைய மாந்தர்களின்
பிம்பத்தின் மேலிலக்கியம்
வடித்தனரோ ?
அவர்தம் சிந்தைத்துளிகள்
கொண்டு அறிவுத்தேடல்கள்
தொடங்கினரோ ?
நிலந்தோறும் தோன்றிய
அறவோரெல்லாம் முன்னிருந்த
தெய்வத்தின் அவதாரமாகி
இலக்கியத்தில் நுழைந்தனரோ?
அறிவார் யாரோ ?
இந்த நீண்ட மரபினிலே ?



Comments
Post a Comment