உள்ளத்திற்கு என்ன தரப்போகிறாய் ?



முதலில் கட்டிலில் முணங்கினாய் என்னுள்
சிலவற்றை உன்னிடம் கரைத்தேன்
பின்னாளில் கட்டிலில் முக்கினாய் கரைத்தவற்றை
பரிசாக மாற்றிக் கொடுத்தாய்
கரைந்த உயிர்த்துளி களைமாற்றி என்னிடமே
கொடுத்தாய் உயிர்கொண்ட சிலையாய்
தந்த தேகயெச் சங்களுக்கு உயிர்க்கொடுத்
தாய் தந்தை ஆக்கினாய்
அதுமட்டுமா தந்தேன் யான்கொடுத்த உள்ளத்திற்
கென்ன தரப்போகிறாய் கண்ணே.

Comments

Popular Posts