இறைவியின் தந்தை


அருகில் நீயிருக்கும் போது
குறுகிய கருப்புவெள்ளை பூக்களால்
என்னை கண்சிமிட்டா கணங்களால்
என்தாய் காப்பதுபோல் உணர்ந்தேன்
சுட்டித்தனத் தாலெனை அதட்டும்
போது எந்தையாகி குழந்தைக்கு
தவறான முன்மாதிரி யாகாவிழிப்
பினால்உன் முன்தவறிழைக் கவஞ்சும்
போது குருவாகி நிற்கிறாய்
தினமும் உளன்று துன்பற்று
களைத்து வருமென்னை உன்மழலைப்
பேச்சால் அவையனைத்தும் மறக்கசெய்து
தெய்வமென காட்சிதரும் நீவேண்டும்
என்றுகேட்கும் மிட்டாயோ பலூனோ
மறுக்கும் வேளைகளில் மனமிறங்கா
அகத்தில்நான் இறைவியின் தந்தைபோல்

Comments

Popular Posts