அத்தனைக்கும் கோணங்கள்



கலவியில் உச்சம் தொட்ட வுணர்வு

உலகின் உயரிய விருது வாங்கியதும்

விமான பயணத்தின் அதிகாலை சூரியன்

பேருந்தில் நெருசலில் வேர்வை துர்நாற்றம்

பேரங்காடியில் மணக்கும் பரிமள வாசனை

பெண்ணின் கழுத்தில் தாலியேறிய தருணம்

மூத்த குழந்தை பிறக்கின்ற நேரம்

தம்பதியர்க்கு, மழலை பேச்சும் தவழ்தலும்

வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் குறிப்பதற்கு

அவர்தம் குழந்தை பூங்காவில் விளையாடும்

மாலைப் பொழுது, பின்வரும் சான்றோனிலை

திருமணம் பேரன் பேத்தி காணுஞ்சுழல்

துக்கத்தால் நெஞ்சடைக்கும் உடையவர் மரணம்

இவையாவும் ஒன்றே ஜென்து றவிக்கு

மொழியாளும் கவிஞனுக்கு அழகியல் கூறுகளாம்

பாத்திரமும் வாழ்வியல் அனுபவமுமா சிரியனுக்காம்

குணமும் மூளைரச வாதமுள வியனோக்கில்

சாத்தியங்களும் பரிமாணமனோ நிலைகளே ஞானிக்கு

பொருளற்ற முற்றுபெறா மாயைகளோ இவ்வாழ்க்கை.

Comments