அலங்காரம் தவிர்க்கும் பெண் எழுத்தாளுமைக்கு கடிதம்


வண்ணமின்றி போவாயோ
உடையவனின்றி போனாலோ


பேனாவின் மைகொண்டு வாழ்பவள்
நெற்றியில் மைகொள்வதால் தவறென்ன

எழுத்து ஆளுமை சமூகத்தின் ஆசான்
சரியெது தவறெது நீயேசொல் லவர்க்கு

உன்னிடம் குழப்பம் உண்டெனில்
உன்வழி எண்ணம் கொண்டவர்
படுகின்ற பாடென்ன எண்ணுக

எண்ணலும் மைவழியே வடித்தலும்
என்பயம் தந்திடுமே செயலின்றி
ஏட்டுச் சுரக்காயென ஆகிடுமே

வழியினை தெரிந்தவர் நடக்கவே
அஞ்சினால் மரபினை கண்மூடியே
பிடிப்பவரை குரைப்பதால் உன்மூலம்
என்னபயன் சமூகத்திற்கு வந்திடுமோ ?

Comments

Popular Posts