ஆணின் பசலை



நீ
ஒளிசிதறச் செய்யும்
முப்பெட்டகமோ ?
என்
எண்ணம் எல்லாம்
சிதறச் செய்கிறாயே ?
நீ நான்
தனிமையில் இருக்கையில்
நினைவினால் செய்கிறாயே ?
தொலைவிலே நிற்கையில்
அழகினால் செய்கிறாயே ?
அருகிலே அமர்கையில்
பேச்சினால் செய்கிறாயே ?
பள்ளியில் துயிலயில்
கனவுகளின் விழைவால்
புலம்பலால் செய்கிறாயே
நீ என்ன
என் கவனம்
ஈர்க்கும் காந்தமோ?
அன்புக்கு ஏங்கும் குழந்தையோ ?
காதலால் மகிழும் துணைவியோ?
பசலையால் வாடும் பேதையோ?
அமைதியற்ற நிலையிலே
எனைவாழச் செய்கிறாயே ?
நிலையற்ற எண்ணங்களாலென்
மனதையுலவச் செய்கிறாயே ?

Comments