கடிகாரம் - காலம்






  1. காலத்தை கட்டுவதற்கு இல்லை
    கடிகாரமே நீ !
    பஞ்சாய் பறக்கும்
    நேரத்தை நூற்பதற்கு
    ----------------------------------------
     
  2. கடிகாரமே நேரத்தை
    ஆள்வது போல் மமதை
    கொள்ளாதே  எங்கள்
    தேவைக்கே ஆக்கிக்கொண்டோம்
    உன்னை மொழி போல
    --------------------------------------------
     
  3. மதிப்பற்ற ஒன்றை
    பரிசாகக் கொடுப்பதற்கும்
    பொருளாதார சிக்கலுக்குள்
    தருவதற்கே அன்பளிப்பாகிறாய்
    கடிகாரமே
    -----------------------------------------
     
  4. கடிகாரமே நேரத்தை
    ஆள்வது போல் மமதை
    கொள்ளாதே  எங்கள்
    தேவைக்கே ஆக்கிக்கொண்டோம்
    உன்னை நூல் போல
    நூல் மொழியாள முடியாது
    நீயும் காலமெனும் மொழியாள
    முடியாது
    -----------------------------------
     
  5. கடிகாரமே
    நீ வெளியில் தானே
    உன் மொழியை
    மட்டும் எம் மனதிலே
    செருகினாய்
    ------------------------------------
     
  6. கடிகாரமே உன்னையும்
    உன் மொழியினையும்
    உதாசினப் படுத்தவே
    காதலும் காதலர்களையும்
    உருவாக்கினோம்.
    --------------------------------------
     
  7. சந்தோஷ கணங்களில்
    பறக்கிறாய் பறவை போல்
    துன்பறும் வேளைகளில்
    நடக்கிறாய் நத்தை போல்
    -------------------------------
     
  8. கடிகாரமே
    இயற்பியலிலும்  உயிரியலிலும்
    எனவிரு முகங்கள் கொண்டாய்
    ஒத்திசைந்து போவதையறிய
    கொடிய ஆய்வுகள் நடந்ததே
    (பிக் பாசை விட )
    ---------------------------------------
     
  9. இன்புறா உயிர்களுக்கு
    நின்னால் ஒலிக்கப்படும்
    ஒவ்வொரு  நொடி சத்தமும்
    மரணத்தின்  நினைவுருத்தும்
    ---------------------------------------
     
  10. வாழ்வை செவ்வனே
    கழிப்பவர்க்கு  நொடிமுள்
    நகர்தலெல்லாம் உள்ளம்
    நொடிய செய்யாது
    -------------------------------------------
     
  11. யோக முறைகளில்
    உனைப்போல்  சீராக
    மூச்சினை விட்டால்
    உன்னை வெகுகாலம்
    பார்க்கலாம்  இதுவே
    முயல் ஆமை கதைக்கரு
    -----------------------------------------
     
  12. என் மனதை உன்னோடு
    கட்டமாட்டேன்
    விரும்பி வாழ்வதை மட்டும்
    கணக்கிடுவேன் நீயோ
    வாழினும் வாழாவிடினும்
    கணக்கிடுவாய்
    --------------------------------------
     
  13. காலமே நீயொரு  கானல் நீர்
    உனையே எண்ணினால் கண்ணில் நீர்
    -----------------------------------------------
     
  14. சுதந்திரத்தின் உச்சியில்
    வாழ நினைப்பவன்  நான்
    உன்பலம்   கொண்டு
    எனையாள நினையாதே
    சார்பியல் கொண்டு
    கட்டுக்குள்  வைப்பேன்
    என்  அறிவினால்
    --------------------------------------
     
  15. உள்ளம் இயற்பியல் கடிகாரத்தோடு
    இணைக்கப் பட்டிருந்தால்
    நன்றே உயிர்களுக்கு உணர்ச்சிகளால்
    பாதிப்படையாது உயிரியல் கடிகாரம்
    அதனால் தாக்கம் கொள்ளா
    நம் உணர்வுகள்
    ----------------------------------------------------
     
  16. காலத்தையே பார்ப்பவரெல்லாம்
    பேரார்வத்தால் எதனையும்
    செய்ததுண்டோ ?
    இல்லை அவரைப் போல்
    காலத்தை  சரியாக
    கழித்தவருண்டோ ?
    ---------------------------------------------------------
     
  17. காலமென்னும்  கடலினிலே
    கடிகாரம் என்னும் சதையில்லா
     மீனுள் மூன்றே முட்கள்
    --------------------------------------------
     
  18. உயிரின்றி போனவரை
    காலமாகி போனாரென
    சொல்லுதல் முரணே
    எல்லாம் நின்று போனவர்
    எப்போதும் நில்லா காலத்தோடு
    எவ்வாறு ஒப்பாவார் ?
    ---------------------------------
     
  19. காலம் தான் பதில்
    சொல்லும் என்று காலம்
    காலமாக சொல்லி வருகிறார்கள்
    காலம் பதில் சொல்லியிருக்கா ?
    ஆம்
    எல்லாம் கடந்து போகும்
    ----------------------------------------
     
  20. காலத்தால் அழியா  எழுத்துக்கள்
    காலத்தால் அழியா கவிதைகள்
    காலத்தால் அழியா காதல்கதை
    என்று  போற்றி சொன்னதுண்டு
    ஆனால் அழியாததென்றும் காலமே
    ---------------------------------------------
     
  21. என்னே புரிதல்  தமிழர்களுக்கும்
    தமிழ்மரபிற்கும்  மரணத்தை
    கொடியதாய் காட்டியது மேற்குலகம்
    இங்கே மரண தேவனுக்கு 
    பெயர் " காலன் "
     காலம் காப்பவனோ ?
    காலத்தில் கடமை ஆற்றுபவனோ ?
    ----------------------------------------------------
     
  22. மரணம்  ஒரு முடிச்சு
    அவிழ்க்கும் தருணம்
    காலம் தான்  அவசியம்
    மெய்ப்பொருள் களைந்து
    செல்லும் கணமே மரணம்
    ----------------------------------------------------
     
  23.  இயற்கை ஆடும் சீட்டாட்த்தில்
    காலம் தான் தீர்மானிக்கும்
    யாரைக் கவிழ்ப்பது யாரை
    ஜோக்கராக வைத்து கொள்வதென்று

Comments