பட்டன்


முன்பொரு முறை
திரைப்படம் பார்க்கையில்
கதையோ அமெரிக்க 
உள்நாட்டு யுத்தம் சார்ந்தது, 
திரைக்கதை மட்டமாக இருக்கவே 
கதைமாந்தர்கள் உடையெல்லாம் கவனிக்கவே 
சட்டைப் பட்டன்
கண்ணில் பட்டதே
நெகிழிப் பட்டன்கள்
பார்த்து பழகியதாலோ
பட்டன் நவீனயுகத்தின்
படைப்பென தோன்றவே
படத்தில் தவறென்று
எண்ணியே தேடினேன்
பட்டன் பற்றியே.


நெகிழிப் பட்டனுக்கே
நவீன யுகம்
பட்டனின் வரலாறு
பட்டென்று சொல்வதற்கில்லை

சிந்து சமவெளியிலே
அதைக்காண முடிந்ததே
கோட் யாமன் காலத்தில்
சுமார் நாலாயிர எண்ணூறு
வருட வரலாறு.

ரோமனிய மற்றும்
சீனப் பகுதிகளில்
வெண்கலக் காலம்
முதலாக இது
காணப்பட்டது சுமார்
நாலாயிரம் ஆண்டு
வரலாறு.

நாம் பட்டென்று
போடும் பட்டன்
கணப்பொழுது கூட
அதைக் கவனிக்காமல்
கடந்து செல்லும்
பொருளுக்கு பல்லாயிர
வருட வரலாறு.

அதற்கு உயிர்வந்து
வாய்வந்தால்
அது கேட்கும்
முதல் கேள்வி

"ஏண்டா டேய் நாலாயிர
வருஷமாக எங்களைக்
கவனிக்காமல் போட்டு
போறீங்களே ? "

Comments

Popular Posts