நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
எப்படி எடுப்பது ?
எப்போது எடுப்பது ?
காலத்தால் உளல்கின்ற நிகழ்வுகளை
காலத்தால் உறைந்த பதிவுகளாக்க
முடியுமென்று
நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
எப்படி எடுப்பது?
எப்போது எடுப்பது?
ஒவ்வொரு நொடியும் நகர்கின்ற
சூரியச்சந்திரரை எந்நொடியில்
நிறுத்துவதென்று
நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
எப்படி எடுப்பது ?
எப்போது எடுப்பது ?
குழந்தையின் அசைவுகள் அனைத்தும்
அழகே சிலநொடிகள் மட்டும்
தான் பதிவுகளாகும்.
நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
எப்படி எடுப்பது ?
எப்போது எடுப்பது?
தொலைதொடர்பு காலத்திலும் நிழற்படத்தின்
உணர்வலை களால்போரை நிறுத்த
முடியுமென்று
நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
எப்படி எடுப்பது ?
எப்போது எடுப்பது?
காதலனும் அப்படித்தான் காதலியின்
பாவனைகள் எல்லாம் உள்ளத்தில்
பதிவுகளாக வைத்திருப்பான்
நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
எப்படி எடுப்பது ?
எப்போது எடுப்பது ?
எல்லோரும் எந்தெந்த கோணத்தில்
அழகாய் தெரிவோமென்று கண்டிப்பாக
தெரியும் அவனுக்கு
நிழற்படம் எடுப்பவனுக்கு தான் தெரியும்
எப்படி எடுப்பது ?
எப்போது எடுப்பது ?
சிலதருணங்களை தவிர பெரும்பாலான
சமயங்களில் அவனென்றும் கூறுவதொன்றே
” கொஞ்சம் சிரியுங்கள்”



Comments
Post a Comment