எண்ணிலடங்கா தூக்கங்கள்





எண்ணில் அடங்கா தூக்கத்தின் வகைகள்பல
எண்ணியே அடங்கும் மனத்தின் வகையொன்று
எண்ணமுள்ள விழிப்பின் தூக்கம் மற்றொன்று
மாண்டவர்ப் போலுணர் வற்றுதூங்கு வதொன்று
ஊண்கரைந்து தேகக்களைப் பினால்விழை வதொன்று
ஊண்ணில்லா காலத்தே உயிரினம் செய்வதொன்று
நீண்டகால தூக்கமும் இதுவே மற்றொன்று
உண்டெனில் எழமுடியா தூக்கமே

Comments

Popular Posts