செருகேடு வேண்டும் எனக்கு


அபி குட்டிக்கு
என் அப்பா
வாங்கி தந்த
கூழ்மை நிலையில்
ஆக்கி இருகவைத்து
விற்பனைக்கு வரும்
ஒவ்வொரு வகையிலும்
ஒருபழசுவை கொண்ட
மிட்டாய் ஒவ்வொன்றாக
அச்சுவை பிடிக்குமோ
என்றறியாமல் அவளுக்கு
வாங்கி தரவேண்டும்
இதுவொன்றும் ஆய்வுகளல்ல


அவள் முதன்முதலில்
சுவைக்கின்ற முகபாவனை
அனைத்தும் நிழற்பட
நினைவுகள் ஆக்கவேண்டும்
ஒருசுவை மிட்டாய்க்கு
ஒருபடம் எனவாக
செருகேடு வேண்டும் எனக்கு.

Comments

Popular Posts