பனைவு





 மறுக்க இயலா மெய்மை கூறுகள்
தொகுத்து இயற்கையின் உண்மை கூறவிழைதலே
பனைவு அஃதொரு சிந்தை யோட்டத்தின்
தொடக்கம் பல்வேறு தளங்கொண்டு செல்ல.


பனைவு வாதத்துக் குட்பட்டது அதனை
முன்மொழி பவரதனின் ஆளுமை தளத்தை
நிர்மானிப் பதேமுறை அவற்றுக்கும் அப்பால்
வாதங்களை அனுமதிப் பதேநுண்ணிய அறிவு

ஆடவர்க்கும் பெண்ணிடீர்க் குமிடைய உள்ள
அன்பிற்கு பாலீர்ப்பே மூலமென்று ரைப்பான்
பிராய்டு எனக்கில்லை என்றால் மறைத்தாய்
என்பான் நுண்ணறி வில்லாப் பனைவில்

பனைவிற் கெதிராய் வாதிடுவனை பொய்யுரைத்
தாயெனக் கூறுவது எத்தகுவி வாதமோ
இதுவேநெறி யற்றவுலகப் புகழ்பெற்ற சிந்தை
கொண்டாடி பின்செல்லும் கூட்டமொரு மந்தை.

Comments