எதில் தொடங்கி எதில் முடிப்பது



காதலில் தொடங்கி
கடலில் முடிப்பது


விழையில் தொடங்கி
கோழையில் முடிப்பது

காதலில் தொடங்கி
தனிமையில் முடிப்பது

ஜோடியில் தொடங்கி
தாடியில் முடிப்பது

காதலில் தொடங்கி
கடிதத்தில் முடிப்பது

கலையில் தொடங்கி
நினைவலையில் முடிப்பது

காதலில் தொடங்கி
காவலில் முடிப்பது

தற்கொலையில் தொடங்கி
கொலையில் முடிப்பது

காதலில் தொடங்கி
கலவில் முடிப்பது

சிலையில் தொடங்கி
சேலையில் முடிப்பது

காதலில் தொடங்கி
செலவில் முடிப்பது

சம்பளத்தில் தொடங்கி
கும்மாளத்தில் முடிப்பது

காதலில் தொடங்கி
களைதலில் முடிப்பது

கலவில் தொடங்கி
கருகலைப்பில் முடிப்பது

காதலில் தொடங்கி
கல்யாணத்தில் முடிப்பது

செலவில் தொடங்கி
முதலில் முடிப்பது

காமத்தில் தொடங்கி
காதலில் முடிப்பது

குழைவில் தொடங்கி
குழந்தையில் முடிப்பது

நட்பில் தொடங்கி
காதலில் முடிப்பது

பயணத்தில் தொடங்கி
பயணமாய் முடிவது.

Comments