அரசியல் தந்திரம்
ஆற்றுநீர் வந்தால் அள்ள
முடியாதாம் மணல் அள்ளும்
வண்டி வந்ததாம்
அரசியல் தந்திரம்.
மக்கள் கேட்டால் என்ன
சொல்வது கர்நாடகம் தமிழனை
வெறுப்பதால் தரவில்லை
அரசியல் தந்திரம்
மாநிலம் எதிர்காலத் தேவை
கருதிகூட தராமல் இருக்கலாம்
எனயோசிக்க விடக்கூடாது
அரசியல் தந்திரம்
அடுத்து அரசிடம் நீர்நிலைகள்
காக்கவென்ன செய்தாய் எனுங்கேள்வி
தவிர்க்கவே வெறுப்பு
அரசியல் தந்திரம்
வேற்று மாநிலத்தவர் மீதுவெறுப்பு
தமிழ்மொழி உணர்வு கொழுந்து
விட்டெரிய மணலெடுக்க
அரசியல் தந்திரம்
இப்பிரச்சனை தீர்க்க வழிகிடையா
தோயிருக்கும் சுலபமாக செய்ய
அதுயாருக்கும் தெரியக்கூடாது
அரசியல் தந்திரம்



Comments
Post a Comment