வார்த்தை திங்கும் மீன்கள்
வீட்டின் மையப்பாத்திரம் உளன்று
திரியும் பயமறியா இளங்கன்று
ஒவ்வொரு வீட்டிலும் கன்றுகள்
உண்டு சொல்லாடல் செவ்வனே
செய்க கன்றுகள் நம்மையே
காணும் அவர்தம் உள்ளங்கள்
வார்த்தை திங்கும் மீன்கள்
ஆசிரியர் கற்பித்த எழுத்துக்கள்
பள்ளியில் கற்கும் பிள்ளைகள்
நாவில் ஒலித்து சிந்தையில்
நுழைய நரம்பினு யிரணுக்கள்
நரநர வென்று சிந்தையைத்
தூண்ட காத்திருக்கும் உள்ளங்கள்
வார்த்தை திங்கும் மீன்கள்
கவிஞரின் கவிதை தொகுப்பும்
அழகியல் சிந்தையும் சொற்சுவையும்
எழுத்தாளரின் கருத்தியல் பொருளும்
உரைநடையும் அன்றாடம் பயிலும்
கற்பனையில் குழையும் அறிவில்
தெளிவும் கொண்ட உள்ளங்கள்
வார்த்தை திங்கும் மீன்கள்



Comments
Post a Comment