முகமூடி அணிகின்ற உலகிலே
முகமூடி அணிகின்ற உலகிலே
யாரிடம் இல்லை முகமூடிகள்
கடுகளவு தெரிந்து மலையளவு
விவரிப்போம் விஞ்ஞானி முகமூடிக்
கொண்டு பிடிக்காதவர் என்றால்
மாமியார் முகமூடிக் கொண்டே
விமர்சிப்போம் பிடித்தவர் என்றால்
பிறர்க்கென குரலெழுப்பும் கணவான்கள்
முகமூடியோ சமூகத்தின் நெருக்கடிக்கு
ஒருமுகமூடி ஆசைக்கொரு முகமூடி
வசதிக்கு ஒன்றும் மதத்திற்கு
ஒன்றும் சாதிக்கும் ஒன்றும்
நீதிக்கு ஒன்றும் சட்டத்திற்கு
ஒன்றும் வாங்கிய பட்டத்திற்கு
ஒன்றும் வாங்கும் சம்பளதிற்கு
ஒன்றும் விரும்பும் கிம்பளதிற்கு
ஒன்றும் சந்தர்ப்பம் கிடைக்கிற
பொழுது எல்லாம் நீதிபதி
முகமூடி இன்னும் எத்தனை
எத்தனையோ உற்றார் உறவினர்க்கு
சகவூழியர் நண்பர்க்கு என்முகம்
தெரியாமல் போனால் பரவாயில்லை
எனக்கே சிலவேலை தெரிவதில்லை
எல்லோருக்கும் முகமூடி அணிய
வேண்டும் என்கிற ஆசையா ?
எல்லா இடத்திலும் நெருக்கடி
எல்லோரின் கருத்துகளும் கேட்காமல்
சட்டங்கள் கட்டுப்பாடுகள் விதித்தால்
இப்படித்தான் உண்மை அறியவதற்கு
முயலாமல் விதிகள் விதித்தால்
விதிகள் இருக்கும் உண்மை
இருக்காது இதற்கு என்னதான்
தீர்வோ எல்லா வற்றையும்
இன்றே மாற்ற இயலாது
ஆயினும் தீர்விருக் கிறதென்றால்
ஆச்சிரியம் உண்மையிலே அதுவென்ன
என்றால் எல்லா வற்றையும்
இலகுவாக ஏற்றுக் கொள்க
அநீதிகளை தவிர்த்து சூழலால்
எதிர்வினை ஆற்றாமல் நிலையினை
ஆராய்ந்து ஆளுமை செய்க.



Comments
Post a Comment