வன்ம மென்பொருள் விளையாட்டுகள்


துப்பாக்கி வேண்டாம் எடுகத்தி

அதில்தான் ரத்தம் பீறிடும்

என்னும் வார்த்தைகள் காதினில்

விழுமந்த கணம்கண் விழிக்க

கனவென நினைத்து மீண்டும்
 

துயில்கொள்ள முயலுமந்த கணம்விழுந்த
 

வார்த்தைகள் மூளையில் உதிரம்பாய
 

கேட்டது "அவளின்கழுத் தறுத்துவிடு"
 

அனைத்து உணர்வும் உறைந்துபோக
 

மேலாடை இருக்காவென் றுக்கூடப்
 

பாராமல் விடுதியறை கதவைத்
 

திறந்து ஒலிவந்த திசைநோக்கி
 

சென்று சரியான அறைக்கதவு
 

உடைத்து பார்த்த அந்தநொடி
 

கண்ட காட்சியை சொல்லவோ ?


கட்டிலில் அமர்ந்திருந்த சமகால

போதைகளில் ஆட்கொள்ள பட்டுமீளா

தன்மை கொண்ட இளைஞரிருவர்

அவர்தம் கைகளில் எலியென

பொருள்படும் கருவியுடன் அருகில்

மடிக்கணினியில் ஆழ்ந்த ஆட்டம்

ஆமவர் கொண்ட போதை

மென்பொருள் விளையாட்டும் அதனுள்

இருக்கும் மென்பொருள் உயிரூட்டமும்.

வீருகொண்டு போய்வெட் கத்துடன்நான்.

Comments