நிலையான போதைக்கு நிலைமாறும் உயிர்கள்
ருசிகண்ட பூனையும் விடாது
இழுத்தே பழகியவிரலும் விடாது
அரித்தே காற்றுப்பை வாழாது
குடித்த போதையென்று நில்லாது
நிலைக்க வேண்டும்மனம் விடாது
புகைத்த போதைவிடுமுறுதி நில்லாது
புகைக்கும் போதை விட்டவருண்டு
பலமுறை அதனை விட்டவருண்டு
பலமுறையும் உறுதி விட்டவருண்டு
பணத்திற்கு சுலபமாக கிடைப்பதும்
போதைக்கு சுலபமாக கிடைப்பதும்
மறைப்பதும் சுலபமாக செய்வதும்
புகைக்கும் பழக்கம்நீண்டு வளர்வதும்



Comments
Post a Comment