இடம் பொருள் வாழ்வு
சட்டையில் கழுத்துப் பட்டையெதற்(கு)
அதைச்சுற்றி கட்டெதற்கு குளிர்க்காற்று
கழுத்துவழி செல்வதை தடுப்பதற்கா
வெட்பநாட்டில் சட்டையை உள்ப்பக்கம்
நுழைப்பது எதற்குகீழ் அங்கியில்
முழுக்குழாய் அங்கியெதற் கென்றறியா
தட்பவெட்ப நாட்டினிலே குளிர்தேச
ஆடையெதற் குக்கோட்டெ தற்கென்று
கேளாமல் அணிகிறோம் அதனையே
முறையான ஆடையென வகுத்துக்
கொண்டோம் வியர்வை உறியுமாடை
அதனைத் தானேற்க வேண்டும்
முறையான ஆடையெது வென்றுநாம்
ஆகவே வரையறை செய்யவேண்டும்
முழுக்குழாய் கள்வேண்டா முக்கால்
குழாய்கள் போதும் இல்லையேல்
வேட்டியே போதும் வரண்டவுணவு
தவிர்த்து நீரதிகம் இருக்குமுணவு
எடுத்தல் வேண்டும் சுற்றுபுறச்
சூழலொட்டி தட்பவெட்ப நிலையறிந்து
உணவுடை இடம்பிடித்து வாழ்வோம்



Comments
Post a Comment