எழுத்துகளில் என்ன முடியும்?
மெய்யுலகில் முடியாதா பலவிஷயம்
செய்ய முடியும் உலத்தின்
நிகழ்வின்றி மாந்தர்தம் உணர்வுகளை
தூண்ட முடியும் யதார்த்தத்தில்
நானுறங்கு கிறேனென்று சொல்ல
முடியாது அப்படிச் சொன்னாலது
மெய்யில்லை நானிறந்து போனேன்
என்றும் கூறவியலாச் சூழலே
மெய்மை இவைகள் எல்லாம்
சாத்தியம் எழுத்துக் கவிதைத்
தளங்களிலே மெய்மையும் தாண்டி
செல்லும் கட்டுக்கு அடங்கா
அமானுஷ்ய கற்பனை உலகமது
இதில் முடியாதது என்றெதுவுமே
கிடையாது சுதந்திரத்தின் உச்சத்தில்
இருந்து கடவுளையும் மண்டியிட
செய்ய முடியும் அவனையும்
மெய்யுலகம் வரச்சொல்லி சவால்
விடவும் முடியுமே இவ்வுலகில்
இத்தளம் தருகின்ற சுதந்திரப்
போதை வேறெதுவும் தந்திடாது
இப்போதை தருகின்ற தைரியமும்
கட்டற்ற அறிவும் வேறெது
தந்திட முடியும் ஆகவே
தானோ பேனாவை ஆயுதமாய்
கொண்டவர் எல்லாம் உலகத்தை
ஒருசமயம் ஆட்டம் காண
வைத்தனரோ அரசுகளும் அதிகார
அமைப்பு களுமரண்ட வரலாறுகள்
பலவுண்டு பேனாவும் அதன்மை
வழியே வந்தயெழுத் துக்களையும்
கருத்துக் களையும் கண்டு
சுதந்திரமாய் சிந்தித்தலும் அதன்வழியே
வருகின்ற தைரியமும் இத்தளம்
வந்துப்போன எவருக்கு மிருக்கும்
உள்ளூற ஆகவே சோடையா
எண்ண வேண்டாம் எவரையும்.



Comments
Post a Comment