பொதுவுடைமை ஜாலம்

cccp

மழை பெய்யும் நேரம் குடையுடன்

சிலர் நல்ல தடித்த ஆடையுடன்

சிலர் தேகம் நடுங்க வாடையுடன்


சிலர் ஏற்ற தாழ்வென்னும் விடையுடன்


சிலர் காணும் நோக்கில்.


இதுவே முதலாளியம் இதுவே ஜனநாயகம்

கேலி செய்வோர்க் கிதனை களைவதாம்

நீதி பொதுவுடைமை என்னும் மார்ஸியம்

மழைபெய் நிலைக்கு திரையொன்று செந்நிறம்

கொண்டு சமூகத்தை போர்த்தி களைவதாம்

தன்னாடை பொருள் அனைத்தும் சுதந்திரம்

ஒடுக்கி சொத்தில்லா சமூகம் அமைப்பதாம்

நீதி என்னும் பொதுவுடைமை.


செந்நிற திரையை விரித்து குடையாக்கி

மழையில் அனைவரையும் காப்பதே சிந்தையாக்கி

அவர்தம் ஆடையை பிடுங்கி செயலாக்கி

குடைகிழியும் தன்மையை சிந்தைவெளி யேவிலக்கி

நீதியை நாட்டுவதாக சொல்லி பரவலாக்கி

பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலும் ஒடுக்கி

காணாத உட்டோபிய சமூகம் உருவாக்கி

காட்டுமென சொல்லுமாம் பொதுவுடைமை.


ஒருசிலருக்கு குடையில்லா நிலையால் உந்தப்பட்டு

உலகத்தவரின் குடையெல்லாம் களைய முற்பட்டு

செயல்படுவது உலகப்பிரச் சனையெல்லாம் விரட்டு

மெனவாதிடும் மார்க்சியம் என்னும் தத்துவமாம்.

Comments